Friday, 6 August 2010

தாடி


 நீ கொடுத்த முத்தத்தை யாரும் தொட்டு விட கூடதுன்னு நான்
அமைத்த முல் வேழிதான் இந்த தாடி
Add caption

என் உயிர் தோழி

என் உயிர் தோழி 
************************
 எப்படியோ வாழ்ந்திருப்பேன் ....
உன்னை சந்திக்காமல் இருந்திருந்தால் ... ஆனால் 
"நீ இப்படித்தான் வாழவேண்டும்" என்று என் வாழ்க்கையை தீர்மானித்தவள் நீ தான்...
அதற்கு உறுதுணையாக நின்றவளும் நீ தான்...
உன் ஆசை தீர்மானத்திற்கு இணங்க 
என் வாழ்க்கையை நான் மாற்றிக்கொண்டேன் ....
இப்போது நல்ல நிலையிலும் இருக்கிறேன் உன் விருப்பப்படி...
ஆனால்.....
அதை ரசிக்கத்தான் நீ இப்போது என்னுடன் இல்லை....
இந்த பிரிவு நமக்கு(நட்புக்கு) தேவையா.....?
நீயே சொல் ... என் உயிர் தோழி ...

உன் நினைவு 
*******************
யாரோ சொன்னார்கள்
" சந்தோஷமாக இருக்கும்போது நீ நேசிப்பவளை நினைப்பாய்...
சோகமாக இருக்கும்போது உன்னை நேசிப்பவளை நினைப்பாய் ..."
என்று... ஆனால் எனக்கோ 
சந்தோசமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும் 
"என்றும் உன் நினைவு " மட்டும் தான் .... 
காரணம்....
நான் நேசிப்பவளும் நீ தான்.....
என்னை நேசிப்பவளும் நீ மட்டும் தான்... 

நீயே சொல் 
*****************
எனக்கும் எல்லா உறவுகளும் இருக்கிறார்கள் ...
என் தாய் தந்தை ....
         சகோதரி...
         அண்ணன் தம்பி....
         நண்பர்கள்....
         தோழிகள்....
ஏன் காதலி கூட இருந்தால்....
ஆனால் உன்னை மட்டும் இந்த உறவுகளில் சேர்த்த மனம் வரவில்லை ...
நீயே சொல்லடி... உனக்கும் எனக்கும் இருக்கும்
இந்த இனிய உறவுக்கு பெயர் என்ன....? 

விடியல் உன் கையில்

இரவின் மடியில் சாய்ந்து கொண்டு
விடியலுக்காக காத்திருப்பதை விட
இரவின் கைபிடித்து நடைபயணம் - செய்துபார்
விடியல் உனக்காக வரவேற்புகம்பளம்
விரித்து காத்திருக்கும்
உழைப்பென்னும் உளி கொண்டு
செதுக்கிபார் - உன் மனதை
உயிருள்ள சிற்பமாய் காட்சியளிப்பாள்
உன் வெற்றி தேவதை
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் என
காலச்சக்கரத்தை வேடிக்கை பார்ப்பதை விட
காலச்சக்கரத்துடன் நீயும் சுழன்று பார்
வாய்ப்புகள் உன் வாசலில் வரிசையில்
நிற்க வாய்ப்பு கேட்கும்
கற்கள் கால்களை பதம்பார்த்தாலும்
நதிகள் தன் ஓட்டத்தை நிறுத்துவதில்லை
கடலில் கலக்கும் வரை
மனிதா
நீயும் கடிவாளம் கட்டிய குதிரையாய் - ஓடிப்பார்
உன் இலட்சிய பாதையில்
உன் இலக்கு உன் கையில் ஜொலிக்கும்
நிலக்கரி பிரித்த வைரமாய்.

நினைவுகல்


1) நீ தனிமையில் இருக்கும் போது 
    உனக்கு என்ன எண்ணம் தோன்றுகிறதோ 
    அதுதான் உன் வாழ்கையை தீர்மானிக்கும்


2) இன்று "நீ" வருத்தப்பட்டு கொண்டிருக்கும் 
    ஒரு விஷயத்தை நாளை நினைத்துப்பார் ...
    அது தேவை இல்லாதது என்று
    உனக்கே புரியும் ...!!!



3) யோசிக்காமல் நீ செய்யும்
    ஒவ்வொரு செயலும் 
    உன்னை யோசிக்க வைக்கும் ...


4) என்னை விட்டுச்சென்ற அவளை 
     இன்னும் காதலித்துக்கொண்டு தான் இருக்கிறேன்..
    அவளை மறக்க முடியாமல் இல்லை...!
     இன்னொருத்தியை நினைக்க தெரியாமல் ... ?  


5) சிரிப்பதே மேலானது ....
     ஏன் அழுகிறோம் என்று விளக்கம் சொல்வதை விட ...!!

Thursday, 5 August 2010

அண்புடன் நட்பு

எழுத்துப் பிழையின்றி
எழுத நினைக்கும்
காதல்
எழுத்துப் பிழையின்றி
வாசிக்க நினைக்கும்
நட்பு

*
என் நண்பனை
அறிமுகப்படுத்தினேன்
சந்தோசப்பட்டனர்

என் நண்பியை
அறிமுகபடுத்தினேன்
சந்தேகபட்டனர்

*
காதலி கொடுத்த பூ
வாடிப்போனது
நண்பி கொடுத்த பூ
வாடவில்லை
அதுதான் நட்பு

*
காயப்படுத்திய கரம்
நட்பென்றாலும் அதே
கரத்தையே தேடும்
குணப்படுத்த நட்பு




உங்கலில் ஒருத்தன் உண்மையான நண்பன்

 நபீன் முகமெட்

உறவு


 
 
சொந்தம் என்ற உறவு
என்னை விட்டுப் போனதோ!!

நட்பு எனும் பூந்தோட்டத்தில்
புல் முலைக்க தொடன்கியதோ!!!

இருவரும் கைகோர்த்து சென்ற
சாலை - இப்போ
வெறுமனே காய்ந்து கிடக்கிறதோ!!!

தோழமைக்கு தோழ் கொடுத்த
தோழமைகள் - வெகு தூரம்
விட்டுச்சென்றதோ!!!!! 



 
 
 
 
சுற்றி வந்த காற்றும்..
பற்றி வந்த கரங்களும்..
அதே
பசுமையான நினைவுகளுடன்..
பார்த்து மகிழ்ந்த காட்சிகளும்...
கேட்டு ரசித்த கானங்களும்...
அதே இனிமையான சுவைகளுடன்..
நடந்து திரிந்த பாதைகளும்..
புரண்டு அழுத தோள்களும்..
அதே ஏக்கமான எண்ணங்களுடன்...
எழுதி வடித்த கவிதைகளும்...
புழுதி அடித்த மழைச்சாறலும்..
அதே மண் வாசனையுடன்..
புரட்டிப் படித்த கதைகளும்
விரட்டிப் பிடித்த விண்மீன்களும்..
அதே கண் சிமிட்டல்களுடன்..
தொட முயன்ற நிலவு...தொட முடியாமலும்..
விட முடியாத நம் உறவைப்போல்......
தொடர்கதையாய்..................

இப்படிக்குப் பூங்காற்று